ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் விருந்தின் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது, சந்தேகநபர் அவரை தாக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.