26 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அக்கரைப்பற்று கடற்கரைப்பிரதேசத்தை
சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணி

அக்கரைப்பற்று கடற்கரைப்பிரதேசத்தை சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணியில் அக்கரைப்பற்று சன்ரைஸ் விளையாட்டுக்கழகத்தினர்கள் இப்பகுதி சமூக சேவா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமது ஓய்வு நேரத்தை களிக்கவரும் பொதுமக்களை மிகவும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுமாறும் தமது குழந்தைகளை குப்பைகளையும் கழிவுகளையும் கடற்கரையில் வீசி மாசு படுத்த வேண்டாம் எனவும் சன்ரைஸ் விளையாட்டுக்கழகத்தினர் வேண்டியுள்ளனர்.

.’சன்ரைஸ்’ கழகத் தொண்டர்கள் கடந்த ஆறு வருடங்களாக இந்த பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் அட்டாளைச்ச்சேனையில் அமைந்துள்ள ‘வெலந்த பொல’ அமைப்பின் தொண்டர்களும் மிக உற்சாகத்துடன் இணைந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு ஒழுங்கீனமாக வீசப்படும் வெற்றுப்போத்தல்கள், பிளாஸ்டிக் கழிவுகள், பாவித்த கடதாசிகள் போன்றவைகளை முற்றாகவே அகற்றினர்.

சன்ரைஸ் கழகத் தலைவர் எம்.எச்.செயினுதீன் இது தொடர்பாக பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘ இது நமது கடற்கரை. இதனைப்பாதுகாப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும் எனவும் நாம் இதனைப்பாதுகாப்பதற்கு உதவமுடியாவிட்டாலும் இதனை அசுத்தமான நிலைக்கு தள்ள வேண்டாம்’.எனவும் வேண்டியுள்ளார். இப்பணி ஒவ்வொரு மாதமும்; தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் இந்தப்பணிக்கு முற்போக்கு எண்ணம் படைத்த சகலரும் உதவி உற்சாகமளித்து வருவதாகவும் தலைவர் செயினுதீன் தெரிவித்தார்

வெலந்தபொல அமைப்பின் தொண்டர் கே.புவிதி கடற்கரை சுத்தமாக இருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு தனது கருத்தை தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles