26 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசியலில் இரட்டை வேடம்

– மாலி
கடந்த ஆட்சிக் காலத் தில் அரசுக்கு ஆதர வாக விருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை அந்த அரசு நடத்தாது காலங்கடத்திய போது, அதற்கு ஆதரவாக இருந்தது. ஆனால், எதிர்க் கட்சியில் இருந்த நாம் அத் தேர்தலை நடாத்த வற்புறுத்தி னோம். இப்போது, எமது அரசு மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தவில்லை என்று, ஜெனி வாவில் தமிழ் தேசிய கூட்ட மைப்பினர் கூறுகிறார்கள்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் அவர்களின் இரட்டைவேடம் இதுவென்று, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியிருக்கிறார்.
ஆக, தாமும் இரட்டை வேஷதாரிகள் என்பதைத்தான் அமைச்சர் தினேஷ் குணவர்த் தன இதன்மூலம் சொல்கிறார்.

இந்த அரசாங்கத்தில் விசித்திரமாக அவதானிக்கப்படு கின்ற தொன்று, ஒரு விவகாரத் தில் அவருக்கு அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வரும் ஒரு விடயத் தில் அதிகார தோரணையில்  ஒவ்வொன்று சொல்கிறார்கள். ஒருவர் நடக்கும் என்பார் இன்னொருவர் நடக்காது என் பார். அமைச்சரவைத் தீர்மான மாக ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னரும் சொல்வார்கள்.

எப்படியெனினும், தினேஷ் குண வர்த்தன சொன்னது உண்மைதான். நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக் களுக்கு நல்லதொன்றைச் செய்து விடலாம்| செய்துவிட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உண்மையிலேயே நம்பினார்; விரும்பினார்.

 செல்வநாயகம் காலத்திலோ அல்லது அமிர்தலிங்கம் காலத்திலோ, இல்லாவிட்டால் பிரபா கரன் காலத்திலோகூட பெறாத ஒன்றைத் தன்னுடைய காலத்தில் பெற்றுவிட்ட தான ஒரு ‘மேற்கோளை’அவர் விரும்பி னார். எனினும், தன் னையும் விஞ்சவல்ல ஒருவரை தன்னுடைய வாரிசாக ஜே. ஆர் ஜயவர்த்தன அப்போதே தேர்ந்திருந்ததை, சம்பந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கைத் தமிழர்களின் அரசியலில், நம்புவதும் ஏமாறு வதும்தான் வரலாறு. வரலாறா கும் பண்டாரநாயக்க – செல்வ நாயகம் ஒப்பந்தம், சேனநாயக்க  – செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன இந்த வரலாற்றைத்தான் சொல் கின்றன. 1976 தனிநாடு பிரக டனத்தின் பின்னரும், மாவட்ட அபிவிருத்தி சபைகளில் அமிர்தலிங்கம் நம்பியதும் ஏமாந்ததும், கூடவே இதில் அடக்கம். (‘பழி ஓரிடம் ; பாவம் ஓரிடம்’ – இதுதான் மாவட்ட அபிவிருத்தி சபைகள்.)

எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்கள் நம்பி ஏமாரவில்லை ; நம்பிக் கெட் டார்கள். தமிழர்கள் தமது அரசியலை ஒற்றுமை முன்னணியாக முன்னெடுக்க தலைப்பட்டதில் 1972இல் தோற்றிய தமிழர் கூட்டணி, தனிநாடு பிரக டனத்துடன் 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியானது.

சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர் விவகாரம் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியபோது அவர்களின் மிதவாத அரசியல் தலைமை யென்ற அங்கீகாரம் அதற்கிருந்தது. ஆனால், பின் னர் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பால் அந்த ஸ்தானத்தை முற்றிலும் எட்டி விட முடியவில்i| எட்டிவிட வும் முடியாது. இதற்கு காரணங்கள் உண்டு. அவை, பெரும் புதிரானவையுமல்ல.

இப்போது, தமிழர் அரசிய லில் மேலும் புதிதுபுதிதாக கூட்டணிகள் – முன்னணிகள் தோற்றியிருக்கின்றன | தோற்றுகின்றன.

உண்மையில் இவர்கள், நம்பிக் கெட்ட தமிழ் இனத்தின் நலனையே கருதிய அர்ப்பணிப்புடன், தன்னலங் கருதாது – அந்த மக்களின் சுபீட்சத்துக்காகவே அரசியல் புரிபவர்களாகவிருந்தால் ஒரு கூட்டுத் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் புத்தெழுச்சி, அப் புத்துயிர்பை ஏற்படுத்தலாம்.

உடனேயே, ஆனந்தசங்கரியு டனா? என்ற கேள்வி, பரிகாசத்துடன் எக்காள மிடும். எல்லோருடைய கணக்கு வழக்கு கள் எல்லாவற்றையுமே சரியாக எழுதி, சரியாகவே கூட்டிக் கழித்துப் பார்த்தால், அப்போது இக் கேள்விக்கான சரியான பதில் தெரியும்.
உதய சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும் என்ற நினைப்பு எழலாம்தான்.        

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles