25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இணைந்த கரங்கள் அமைப்பினால்
கற்றல் உபகரணங்கள் வழங்கல்

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு முறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் ஆசிரியர் எஸ்.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
வாகரை பிரதேசத்தின் பிரதான பாதையில் இருந்து காட்டுப்பாதையில் உள்ளே 20மைல் தொலைவில் உள்ள பாடசாலைக்கு தினமும் சென்று ஆசிரியர்கள் சிரமப்பட்டு கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.
அங்கே கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகள் கூட இடம்பெறுவதில்லை இருந்த போதிலும் மாணவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்கள் மூலம் பிரத்தியோக வகுப்புகள் மட்டுமே பாடசாலையின் ஆசிரியர்களினால் நடார்த்தப்படுகிறது.

மேலும் கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.வி.லிங்கேஸ்வரன், பல்கலைக்கழக மாணவிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன்,திரு. எஸ்.காந்தன், திரு.கி.சங்கீத், திரு.சி.தனோஜன் திரு.சி.துலக்சன், மா.ஜெகநாதன் திரு.நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு இணைந்த கரங்கள் அமைப்பினரால் மட்டக்களப்பு முறிவுக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பணிக்கு முழுதான நிதிப் பங்களிப்பை இணைந்த கரங்கள் மற்றும் திரு.தர்சன் சௌந்தராஜன்,மற்றும் திரு. ராஜரெட்ணம், ஆகியோரும் வழங்கியுள்ளனர். இப்பணி இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணைந்த கரங்கள் உறுப்பினர் திரு.லோ.கஜரூபன் மேலும் தெரிவிக்கையில் இந் நிகழ்வுகளை உலகறியச் செய்து மாணவச்சிறார்களுக்கு கல்விக்காக பாடுபடும் டான் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு எங்கள் குழமத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles