27 C
Colombo
Wednesday, December 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கும் எந்த திட்டமும் என்னிடம் இருந்ததில்லை – டக்ளஸ்

இந்திய மீனவர்கள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கும் எந்தவொரு திட்டமும் கடந்த காலங்களில் தன்னிடம் இருந்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பலவீனங்களை மறைக்கும் வகையில் கடற்றொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளாார்.

வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்திய இழுவைப் படகுகளுக்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் சிந்தனையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டு விட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, “எமது கடல் வளங்களை அழிக்கின்ற இழுவைமடி தொழில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே 90 ஆம் ஆண்டுகளில் இருந்து எனது உறுதியான நிலைப்பாடாக இருந்து வருகிறது.

கடற்றொழில் அமைச்சராக நான் செயல்பட்ட காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சின் நிலைப்பாடும் அவ்வாறே இருந்தது.

இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வெளியிடப்படுவதானது, ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் கடற்றொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்தபோதும், இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் எனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தேன்”- என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles