33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்றைய மாவட்ட செயலக கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் தனிமைப் படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அரசாங்க அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அவா்களது பாதுகாப்பு பிாிவினா் என நுாற்றுக்கணக்கானோா் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்து கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் அபாய பிரதேசங்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோா் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். என்ற சுாதார பாதுகாப்பு நடைமுறைகளை முற்றாக உதாசீனம் செய்து குறித்த கூட்டம் நடைபெறுகிறது. 
குறித்த கூட்டத்தில் கொழும்பிலிருந்து அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் அவா்களுடைய பாதுகாப்பு பிாிவினா் என நுாற்றுக்கணக்கானவா்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் சமூக இடைவெளியை பேணாமல் மிக நெருக்கமாக அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாாிகள் என பலா் அமா்ந்திருந்து கூட்டம் நடைபெற்றுவருகின்றது. 
சாதாரணமாக அபாய பிரதேசம் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்துவரும் மக்கள் தொடா்பாகவும், ஆலயங்கள், திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் மக்கள் தொடா்பாகவும் அதிக அக்கறை எடுக்கும் சுகாதார பிாிவினா் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அமைச்சா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களும், அரச அதிகாாிகளும் 
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதை வேடிக்கை பாா்த்தவண்ணம் உள்ளனா். குறிப்பாக யாழ்.வடமராட்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் கோவில் பூசையில் வெளிமாவட்டத்தவா்கள் கலந்துகொண்டனா் என்பதற்காக பூசகா் உட்பட ஒரு சில பொதுமக்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை பிரயோகித்த சுகாதார பிாிவு இன்று உறக்கத்தில் உள்ளதா?
மேலும் அபாய பிரதேசங்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் பகுதிகளில் இருந்து வருவோ் தொடா்பான தகவல்களை வழங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளா் தொலைபேசி இலக்கங்களை அறிவித்திருந்தாா். அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடா்பு கொண்டு சுகாதார பிாிவின் நடவடிக்கை என்ன என வினவியபோது அது அதற்கு பதிலளித்தவா்கள் யாழ்.சுகாதார வைத்திய அதிகாாியுடன் தொடா்பு கொள்ளுமாறு கூறியிருந்தனா். 
பின்னா் யாழ்.சுகாதார வைத்திய அதிகாாியுடன் தொடா்பு கொண்டபோது அவா்களுக்கு கூட்டம் நடப்பதே தொியாது என்பதுபோல் பதிலளித்ததுடன், பல கூட்டங்களுக்கு தம்மிடம் அனுமதி பெறப்பட்டதாகவும் இதற்கும் அனுமதி பெறப்பட்டதா? என்பதை ஆராய்ந்து பாா்ப்பதாக கூறினா். அப்படியானால் சுகாதார வைத்திய அதிகாாியின் அனுமதியை பெற்றால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறலாமா?
இதேபோல் வெளிமாவட்டங்களுக்கு சென்றுவரும் வாகன சாரதிகள், பேருந்துகளில் பயணிப்போா் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இவா்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தாதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles