30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகு மாறு அவரது தம்பியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜ பக்ஷ கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்து சில நிமிடங்களி லேயே அதனை பிரதமர் அலுவலகம் மறுத்திருந்ததை வாசகர்
கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜனாதிபதி மாளிகையில், (அதுவே இப்போது ஜனாதிபதி செயலகமும் கூட) நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன் றில் பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டதா கவும், ஆனால் அதனை சில அமைச்சர்கள் விரும்பவில்லை என்றும்,
வேறு சிலர் விரும்பியதாகவும் செய்திகள் வெளிவந் திருந்தன.
நாட்டில் பரவலாக நடக்கும் போராட்டங்களுக்கு பணிந்து பதவியை விலகுவது சரியானதாக இருக்காது என்று அந்தக் கூட்டத்தில் பிரதமர் தனது கருத்தை சொல்லியபோதிலும், ஜனாதிபதி அழுத்தமாக சில விடயங்களைக் கூறியதாகவுமே
அந்தச் செய்திகள் வெளிவந்திருந்தன. எதிர்வரும் திங்கள் கிழமை (இன்று) பிரதமர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டுவிட்டு பதவி விலகுவார் என்றே அந்தச் செய்திகள் தெரி வித்திருந்தன.
ஆனால், அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும்கூட ஒரு சில மணி நேரங்களிலேயே பிரதமர் அலுவலகம் அதனை மறுத் திருந்ததோடு, ஜனாதிபதி அவ்வாறு பிரதமரைக் கேட்க வில்லை என்றும் விளக்கமளித்திருந்தது.
அவர் அவ்வாறு கேட்டாரா இல்லையா என்பதை யாரை யும்கேட்டுத்தான் நாம் அறியவேண்டும் என்பதல்ல. ஜனாதி பதி அவ்வாறு கேட்டாரா, யார் சொல்வது உண்மை என்பதை பலரும் தத்தமக்கு புரிந்த வகையில் வியாக்கியானம் செய்து
கொண்டிருந்தபோதே இந்தச் செய்தியும் வெளிவந்தது.
தான் அமைக்க விரும்பும் இடைக்கால அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அவரிடம் கேட்டதாக வெளி வந்த செய்தி மறைமுகமாக ஒரு தகவலை நமக்குச் சொல்லி
யிருக்கின்றது.
தற்போதைய பிரதமர் பதவி விலகாவிட்டால், சஜித் பிரேம தாசவை இடைக்கால பிரதமராக பதவியை ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள் என்று ஜனாதிபதி கேட்டிருக்க மாட்டார்.
இந்தச் செய்தியே அன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பதை ஓரளவிற்கு ஊகிக்க வைத்திருக்கின்றது.
இதேவேளை, நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து சிறி மகாபோதி, மிரிசு வெட்டிய, ருவன்வெலிசய ஆகிய புனித தலங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்ததோடு, கொழும்பு திரும்பியிருக்கின்றார்.
ஏற்கனவே, வெளிவந்த செய்திகளைப் போல, இன்று பிர தமர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்றும், அதற்காகவே, முன்னதாக புனித தலங்களுக்கு சென்று வழி பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுவதாக சில தகவல்கள் தெரிவித்தன.
இதைவிட, எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கையளித்துள்ள அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாய கர் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்திருப்பதும், அந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதாக சுயாதீனமாக இயங்கும் குழுவினர் கூட்டாக அறிவித்திருப்பதும் மற்று
மொரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது.
பிரதிச் சபாநாயகர் தேர்வின்போது, சுயாதீனக்குழுவின் வேட்பாளரை ஆதரித்து, நெருக்கடியை தற்காலிகமாக சமாளித்துக்கொண்ட ஆளுந்தரப்பு, அந்த வாக்கெடுப்பின் மூலம் தனது பலத்தையும் அறிந்துகொண்டிருக்கின்றது.
சுயாதீனக்குழுவுடன் சேர்த்து, அரசின் பலம் நூற்றி நாற்பத்தியெட்டு என்றால், அது இல்லாமல் அதனது பலம் என்ன என்பதும் அரசுக்கு – முக்கியமாக, மஹிந்த தரப்பிற்கு
இப்போது தெரியவந்திருக்கின்றது.
ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நம்பிக்கை யில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு வந்தால், அதனை தாக்குப்பிடிக்க முடியுமா என்பதை தெரிந்துகொண்ட பின்ன ரும் பிரதமர் பதவியை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும்
அளவிற்கு மஹிந்த அரசியல் அறிவு இல்லாதவரல்லர். சர்வகட்சி இடைக்கால அரசிற்கு இதுகாலவரை தடையாக இருந்த ஒரு விடயம் விரைவில் இல்லாமல் போய்விடும் என்றே இப்போது பரவலாக நம்பப்படும் நிலையில், அடுத்து
என்ன நடக்கும் என்பதே இன்று எல்லோர் மனதிலும் எழும் முக்கிய கேள்வி.
இதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சபாநாயகரிடம் கையளித்திருந்த இருபத்தியோராவது அரசியலமைப்பு திருத்தம் சபாநாயகரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்
டுள்ள நிலையில், அந்த விவகாரமும் அதாவது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் விடயமும் சரியான திசையிலேயே நகர்ந்துகொண்டிருப்பது தெரிகின்றது.
இப்படியே நல்லவையே நடந்துகொண்டிருந்தால், நாட் டுக்கும் நல்லது, நமக்கும்தான்!

– ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles