30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

அவர் முன்னாள் ஆயுத இயக்கம் ஒன்றின் ஒரு முக்கிய பிரமுகர். லண்டனில் அரச பள்ளியில் ஆசிரியராக இருக் கும் அவர், அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு
கொள்ளுவார்.
சில தினங்களுக்கு முன்னனர் கூட்டமைப்பின் மட்டக் களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராசபுத்திரன் இராசமாணிக்கமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ{ம் சுவிற்சர்லாந்தின் அழைப்பின்பேரில் அங்கு சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரும் சுவிஸ் போயிருப்பது ஈழத்தமிழர்க ளின் பிரச்னைகளைப்பற்றி சுவிஸ் அரசாங்கத்துடன் பேசுவ தற்கு என்றவாறு, இருவரினதும் ஆதரவு முகநூல் போராளி கள் தத்தம் விருப்பங்களுக்கு ஏற்றவாறு எழுதிக்கொண்டி ருந்தபோது – இந்த லண்டன் நண்பரிடமிருந்து ஒரு குறுந் தகவல் வந்தது. அதனை படித்துவிட்டு நானும் அதற்கு எதிர்வினையாற்றாமல் இருந்துவிட்டேன்.
‘சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக ரீதியான இளையவர்களின் ஒன்றுகூடல் சுவிற்சர்லாந்தில் இடம்பெற்று வருகிறது.
ஏழுநாட்கள் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் இலங்கையிலிருந்து சாணக்கியன் – சுகாஸ், ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரக பெண் அதிகாரி , முஸ்லிம் பிரதி
நிதி மற்றும் ஒரு சிங்கள பிரதிநிதி கலந்து கொண்டுள்ளனர்.
இங்கு, இலங்கை பிரச்னையோ அல்லது ஈழத்தமிழர் விவகாரமோ கலந்துரையாடப்படமாட்டாது என்பதுடன், பொதுவான கருப்பொருளில் மட்டுமே இக் கலந்துரையா டல் இடம்பெறும் என, சுவிற்சர்லாந்தின் தெற்காசிய விவ காரங்களுக்கு பொறுப்பான முக்கிய அதிகாரி உறுதிப்படுத் தினார், சில ஊடகங்கள், இலங்கை பிரதிநிதிகளின் சுவிற்சர் லாந்து வருகை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பிலே இத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப் பிடத்தக்கது.’
மேலேயுள்ள தகவல்தான் அவரிடமிருந்து வந்தது. நான் அதுகுறித்து இந்தப் பத்தியில் ஏதாவது குறிப்பிடுவேன் என் பதற்ககாவே அவர் இதனை அனுப்பியிருக்கலாம். ஆனால், ஏனோ நான் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
நேற்று முன்தினம் அவரிடமிருந்து அழைப்பு வந்தபோது பதிலளிக்க முடியவில்லை. பல மணி நேரத்தின் பின்னர் அவரை அழைத்தபோது, அவர் வழக்கமாக பேசுகின்ற
நமது அரசியல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால் நானோ, அவரும் தெரியவேண்டும் என்ற சில விடயங்களை சொல்லிக்கொண்டிருந்தபோது, அவற்றை அவர் ஆவலுடன் கேட்கவில்லை என்பது புரிந்தது.
அவரே பின்னர் சொன்னார், ‘இல்லை, சில தலைவர்க ளின் பேச்சுக்களை கேட்கின்றபோது, அவர்கள் தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று எண்ணிக்கொண் டிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. எனது கவலை எல்
லாம் அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கின்ற அந்தத் தமிழர்களில்தானோ நாமும் அடங்குகின்றோம். அதாவது, எங்களையும் முட்டாள்கள் என்றுதானே அவர்கள் நினைத் துக்கொண்டிருக்கின்றார்கள்’ என்று சலித்துக்கொண்டார்.
அவருடடைய சலிப்பும், கவலையும் நியாயமானது தான். அதே கவலையும் சலிப்பும் இந்த ஊர்க்குருவிக்கும் இருக்கின்றது என்று சொல்வதைவிட, வேறு பதில் இருக்க
வில்லை.
தமிழ் அரசியல்வாதிகள் பற்றி, அதிலும் ஒருசில தலை வர்கள் பற்றி நாங்கள் சலித்துக்கொண்டது பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போதுதான், அந்தச் செய்தியையும் பார்க்க முடிந்தது.
பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாரா ளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த அந்த காணொ ளியை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்:
‘மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம். ஆகையால், இந்த வார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கின்றது’ என்று.
அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை,
‘ரணில் பிரதமராக வந்த பின்னர், அதாவது புதிய அரசாங் கமும், வரிகளை அதிகரித்திருக்கின்றது. இது மக்கள்மீது மேலும் சுமையை ஏற்படுத்தியிருக்கின்றது’ என்று அவர் சொன்னபோதுதான் அடடே, தமிழ் தலைவர்கள் மாத்திர மல்ல, சிங்களத் தலைவர்களும் தமது மக்களை அப்படித் தான் நினைக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றியது.
நாடு இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு, ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் வரிகளை குறைத்ததுதான் மூலகாரணம் என்று தொடர்ச்சியாக கூறிவந்த எதிர்க்கட்
சித் தலைவர், இப்போது வரி அதிகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பதைப் பார்த்தபோது, அவர்களும் தமது மக்களை முட்டாள்கள் என்றுதான் நினைத்துக்கொண்டி ருக்கிறார்களோ என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles