33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்துகொண்டு போய்க்கொண்டிருந்த காலம் அது.
தினசரி காலையில் ஜனாதிபதிக்கு டொலர் கையிருப்புக் குறித்து அவரின் செயலாளராக இருந்த டி. பி. ஜெயசுந்தர தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
வேகமாகக் குறைந்து கொண்டிருந்த கையிருப்பை, குறை யும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பதை ஜெயசுந்தர அடிக்கடி ஜனாதிபதிக்கு எச்சரிக்கை செய்துகொண்டிருந் தாராம்.
மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது எட்டு ஆண்டுக ளுக்கும் மேலாக திறைசேரியின் செயலாளராக இருந்தவர் இந்த டி. பி. ஜெயசுந்தர. இதனாலேயே நாட்டின் பொரு
ளாதார நிலைமையை தெரிந்துகொண்டதால் அவரை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் அவரின் செய லாளராக நியமித்திருக்கலாம்.
தினமும் காலையில் ஜனாதிபதியைச் சந்திக்கும் அவரின் செயளலாளர் டி. பி. ஜெயசுந்தர, குறைந்துகொண்டு செல் லும் டொலர் கையிருப்பைத் தக்க வைக்க என்ன செய்ய லாம் என்று யோசனை கேட்டபோது, அவசியமற்ற
பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு யோசனை தெரிவித்தார் அவர். வாகனங்கள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டது. இப்படி பார்த்துப் பார்த்து டொலர்
வெளியேற்றத்தைத் தடுக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், அப்படியிருந்த போதிலும் டொலர் கையிருப்பு குறையும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு கட்டத்தில் உர இறக்குமதிக்கும் எவ்வளவு டொலர் கள் செலவாகின்றன என்ற கணக்கை ஜெயசுந்தர போட்டுக் காட்ட, அதனையும் தடை செய்ய முடிவுசெய்யப்பட்டது.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இயற்கை விவசாயத் திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்த ஜனாதிபதியும், அதனைக் காரணமாக வைத்து உர இறக்குமதியைத் தடைசெய்ய முடிவெடுத்தார்.
உர இறக்குமதியை தடை செய்வதால், டொலர் கையி ருப்பு குறையும் வேகத்தை கட்டுப்படுத்தலாமே தவிர, டொலர் கையிருப்பு குறைவதை தடுக்கமுடியாது என்பதும்
அவர்களுக்கு தெரியாததல்ல.
ஆனால், டொலர் கையிருப்பு முற்றாக முடிந்துவிட நாடு, பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தபோது, உர இறக்குமதியை தடை செய்ததாலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டதாகவும், ஜனாதிபதியின் இந்த தவறான முடிவு தான் அதற்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இன்றுவரை அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
அன்று அவர் அவ்வாறு தடை செய்யாமல் விட்டிருந்தா லும்கூட, சில மாதங்களிலேயே உரத்தை இறக்குமதி செய்ய டொலர் துளிக்கும் இருந்திருக்காது. இதனால் தானாகவே
உரம் இறக்குமதியும் முடங்கியிருக்கும். அப்படியொரு நிலை ஏற்படுகின்றபோது, அதன் பழி ஜனாதிபதியின் தலை யில் வந்திருக்காது.
அதாவது, உரத்துக்கான இறக்குமதிக்கு அனுமதி இருந்தி ருந்தாலும், அதனை இறக்குமதி செய்ய டொலர் இருந்திருக் காது. இப்போதும், அதேபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட் டிருக்கின்றது.
எரிபொருள் இறக்குமதிக்கு தடை இல்லை. ஆனாலும் எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர் இல்லாததால் எரிபொருள் நெருக்கடி தொடர்கின்றது.
இருக்கும் கையிருப்பை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிப்பது என்று முடிவெடுத்த அரசாங் கம், அதனை சிக்கனமாக பயன்படுத்தி சில நாட்களை
சமாளிக்க முயன்று கொண்டிருக்கின்றது.
அடுத்த சில நாட்களில் வருகின்ற எரிபொருட்களையும் இதேபோன்று அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் விநியோகித்தால் மட்டுமே சமாளிக்கவும் முடியும், மக்களி
டையே கொந்தளிப்பு இன்றி விநியோகிக்கவும் முடியும்.
கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவு குறைந்து கொண்டே சென்று கொண்டிருப்பது குறித்து ஜனாதிபதிக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
அதுதான் அவர் இப்போது, அத்தியாவசிய சேவைக ளுக்கு கொடுப்பதை எப்படிக் குறைக்கலாம் என்று சிந் தித்து, அத்தியாவசிய சேவைகள் பட்டியலை குறைத்
திருக்கின்றார் போலும்.
எரிபொருள் விநியோகம், மருத்துவ சேவை, மின்சாரம் வழங்கல் ஆகிய மூன்று துறைகளை மாத்திரமே அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்திருக்கின்றார்.
இனி இந்த மூன்று சேவையினருக்கும் மாத்திரமே எரிபொருள் கிடைக்கலாம். இது உர இறக்குமதியை தடுத்து டொலர் கையிருப்பை பாதுகாக்க முயன்றதுபோல,
எரிபொருள் விநியோகத்தை குறைத்து கையிருப்பிலுள்ள எரிபொருளை சில நாட்கள் அதிகமாக பயன்படுத்த உதவலாம். அவ்வளவுதான்.

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles