27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இளம்பிக்குகள் மீதான பாலியல்
துஸ்பிரயோகம்:கல்முனை நீதிமன்றில் வழக்கு விசாரணை

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்ற கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

விசாரணைகளின் போது மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி சார்ப்பில் நேற்று ஆஜரான முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை தொடர்பில் நீண்ட விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பித்து பிணைக்கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும், மதகுருவின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட அதேவேளை, மருத்துவ அறிக்கையின் ஊடாக பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இளம் பிக்குகள் ஆளாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் நீதிவானிடம் சுட்டிக்காட்டப்பட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles