32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்

கனேடிய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவம் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்சித்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 327 உளளூராட்சி மன்றங்களிலிருந்து 5 உள்ளுராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கோறளைப்பற்று பிரதேச சபை வாழைச்சேனையும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்ச்;சி திட்டத்தின் கீழ் பெண்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன் அதன் ஊடாக உள்ளூராட்சி மன்ற சேவையை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை பொதுமக்களுக்கு வழங்குதலாகும்.

நிகழ்வில் 6 வருடத் திட்டத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள்,பிரதேச சமூக மட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என 17 நபர்கள் கொண்ட செயற்திட்டத்தின் செயற்க்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் தவிசாளரை தலைவராக கொண்டு எதிர்கால தேவைகளை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படுவர்.

நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் நிறைவேற்றுப் சபையின் உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.முகமட் நெ?ஸாட்,இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமசிறி கேமந்தி குணசேகர்,இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத் சிரேஸ்ட நிகழ்சிதிட்ட முகாமையாளர் பிரதீப் ,நிகழ்சி திட்ட உத்தியோகஸ்த்தர் நிதர்சினி ஆகியோர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்கள்,சனசமூக நிலையங்களின் உறுப்பினர்கள்.மகளிர் சங்கங்கள்,விசேட தேவையுடையோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles