எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக, மக்களைப் பாதுகாப்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.