25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின்
நடமாட்டம் அதிகரிப்பு

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவக்கை எடுத்துள்ளனர்.

கல்முனை மாநகர எல்லைக்குள் கட்டாக்காலி மாடுகள் நடமாட்டம் குறித்து எமது ஊடகம் அண்மையில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் மாநகர சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இப்பிரச்சினையை கல்முனை மாநகர முதல்வர் ஆணையாளர் பொறியியலாளர் மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் மாநகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்து பல கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றி உரிமையாளர்களை பள்ளிவாசல் ஒலிபெருக்கி மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இதன்படி கடந்த மூன்று நாட்களாக மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு மீட்கப்படாத மாடுகள் தொடர்பிலான அறிவித்தல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

பாதைகள் ,சந்தைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில்
இடையூறாகவும் தொல்லையாவும் காணப்பட்ட குறித்த தொகை கால்நடைகள் கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு மாநகர சபைக்கு சொந்தமான காணியினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமக்குச் சொந்தமான கால்நடைகள் மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டும் இதன் உரிமையாளர்கள் இவற்றை பாரமேற்காமல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கால்நடைகளை பராமரிப்பதில் மாநகர சபைக்கு உள்ள கஷ்டங்களைக் கொண்டோ மாநகர சபையின் உத்தியோகத்தர் ஊழியர் எவருடையதும் ஒத்துழைப்பையோ எதிர்பார்த்து இவ்வாறு கால்நடை உரிமையாளர்கள் செயற்பட்டுள்ளார்கள் என நிரூபிக்கப்படுமாயின் குறித்த நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .இக்கால்நடைகளை பராமரிக்கும் அனுபவம் வாய்ந்த தினக்கூலி பெறக்கூடிய வேலையாட்கள் யாரும் இருப்பின் மாநகர சபையினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles