25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காத்தான்குடி நகரசபைக்கு தவிசாளர் ஏ.ஜெபநேசன் விஜயம்

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபையை பார்வையிடுவதற்காக வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜெபநேசன் இன்று காத்தான்குடி நகரசபைக்கு வருகை தந்து காத்தான்குடி நகர சபையை பார்வையிட்டார்.

வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜெபநேசன் தலைமையிலான குழுவினருக்கும் காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெசீம் தலைமையிலான குழுவினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று காத்தான்குடி நகர சபையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி நகர சபை வேலைத் திட்டங்கள் மற்றும் காத்தான்குடி நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவம், சேதனப் பசளை தயாரிப்பு போன்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜெபநேசன் தலைமையிலான குழுவினர் கேட்டறிந்து கொண்டதுடன் திட்டங்களையும் பார்வையிட்டனர்.

காத்தான்குடி நகர சபை வேலைத் திட்டங்களை தொடர்பான காணொளியும் காண்பிக்கப்பட்டது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles