28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘கேஜிஎப் 2’ படம் தள்ளிப் போகிறது?

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க, கன்னடத்தில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கேஜிஎப்’. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பாரிய வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் 2’ படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளிவந்து பெரும் சாதனையைப் படைத்தது.

இப்படத்தை ஜுலை 16ஆம் திகதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

ஆனால், இந்தியாவில் தற்போதுள்ளச் சூழ்நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. சில மாநிலங்களில் ஜுலை 1 முதல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறந்த பிறகு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளும் தாமதமாக நடைபெறுவதால் ஜுலை 16இல் படம் நிச்சயம் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles