31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா காலத்திலும்கூட இலங்கையின் துறைமுக சேவை என்பது பலம்பொருந்திய சேவையாக இயங்கியது – ரோஹித அபேகுணவர்தன எம்.பி

கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியிலும்கூட இலங்கையின் துறைமுக சேவை என்பது பலம்பொருந்திய சேவையாக முன்னெடுக்கப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சராக நான் பொறுப்பேற்றேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கான பொறுப்பை என்னிடம் கையளித்தனர்.

மிகவும் சவாலுக்குரிய காலப்பகுதியிலேயே நான் இந்த பொறுப்பை ஏற்றேன்.

தற்போதும்கூட அந்த சவால்கள் காணப்படுகின்றன.

எமது நாடும் சர்வதேசமும் எதிர்கொண்ட கொரோனா பெருந்தொற்று சவாலே அந்த சவாலாகும்.

கொரோனா பெருந்தொற்றுக்கு நாம் பாரியளவு நாம் முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் சேவையை வழங்குகின்ற 365 நாட்களும் சேவையை வழங்குகின்ற இலங்கை துறைமுக அதிகார சபை என்ற முறையில் இந்த சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு எமக்கு நேர்ந்தது.

அந்த சவால்களை நாம் ஏற்றுக்கொண்டோம். அந்த சவால்களை ஏற்றுக்கொண்டு சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக சேவையை வழங்குவதற்காக பாரிய உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அந்த பணியை நாம் முன்னெடுத்தோம்.

துறைமுக அதிகாரிகள், துறைமுக ஊழியர்கள் என சகல தரப்பினரும் இந்த சவால்களை ஏற்றுக்கொண்டனர்.

சர்வதேச ரீதியில் துறைகமுங்களின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டபோது கொழும்பு துறைமுக அதிகாரிகள் அதனை மிகவும் சிறந்த முறையில் முன்கொண்டு சென்றனர்.

நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியில் நாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து சென்றமைக்காக சகல தரப்பினருக்கும் நாம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles