25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில்
மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் அதிபர் க.செல்வராஜா வழிகாட்டலில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் செயலணிக்குழு ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் சிறந்த ஜனநாயகப் பண்புகளை வளர்த்தெடுப்பதை நோக்கமாக கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன் தேசிய தேர்தல்களின் போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யாரை தெரிவுசெய்ய வேண்டும் தேர்தல் வாக்களிப்பி;ன் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பொறுமை, சகிப்பத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கான ஆலூசணைகள்,வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான வகுப்புக்களை உள்ளடக்கிய வகையில் ஒரு வாக்களிப்பு நிலையமும், தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்களை உள்ளடக்கி மற்றுமொரு வாக்களிப்பு நிலையமும் நிறுவப்பட்டு மாணவர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

இவ் மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் 90மாணவர்கள் போட்டியிட்டிருந்ததுடன் அவர்களில் 60 பேர் மாணவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களில் 20 மாணவர்களும், தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்களில் இருந்து 40 மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles