31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்களுக்கு 9ஏ சித்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2021ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்த நிலையில், மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் 15 பேர் 9ஏ சித்திகளையும், மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் 8 பேர் 9ஏ சித்திகளையும், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் 7 பேர் 9 ஏ சித்திகளையும், பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9 ஏ சித்திகளையும், வங்காலை சென் ஆன்ஸ் பாடசாலை மாணவர்கள் 2 பேர் 9 ஏ சித்திகளையும், நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் 2 பேர் 9 ஏ சித்திகளையும், அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவர் 9ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles