30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது அவுஸ்ரேலியா கண்காணிப்பாளர் சிரேஷ்ட அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவிப்பு

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் அவுஸ்ரோலியா பொலிசார் மற்றும் கடற்படையினரால் கைது செய்ய செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் எனவே சட்டவிரோத ஆள்கடத்தல் காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பயணம் வைத்து பிரயாணிக்கவேண்டாம் என இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் சிரேஷ்ட அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத ஆள்கடத்தல் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உடன் இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தலைமையிலான ஃபெடரல் பொலிஸ் ஊடக அதிகாரி மைக்கல் உட்பட பொலிஸ்அதிகாரிகள் இடையே நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியாவுக்கு ஆள்கடத்தல்காரர் ஊடாக குடியேற முயற்சித்தவர்களை அவுஸ்ரோலியா பொலிசார் மற்றும் கடற்படையினர் கைது செய்து திருப்பியுள்ளனர்
எனவே எப்போதும் அவுஸ்ரோலியா சட்டவிரோ குடியேற்ற வாசிகளை ஏற்றுக் கொள்ளது எனவே உங்களுடைய பணத்தையும் உயிரையும் சட்டவிரோத ஆள்கடத்தல் காரர்களிடம் கொடுத்து ஏமாறவேண்டாம் ஆகவே இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் .

இலங்கை பொலிசாருடன் அவுஸ்ரோலிய பொலிசார் இணைந்து இந்த ஆள்கடத்தல் கும்பல் தொடர்பாக தகவல் பரிமாறவுள்ளதுடன் ஆள்கடத்தல் காரர்களை கைது செய்து சட்டத்துக்குமுன் நிறுத்த இரண்டு நாட்டு பொலிசாரும் கூட்டாக செயற்படும் என தெரிவித்தார்

இக்கலந்துரையாடலை தொடர்ந்து இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் ,ஃபெடரல் பொலிஸ் ஊடக அதிகாரி மைக்கல் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles