யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது -64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று இரவு 7. 30 மணியளவில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளிலில் வரும் போது எதிரே வந்த கார் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்பின்னர் அம்புலன்ஸூக்கு அறிவித்த போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே குறித்த இடத்துக்கு அம்புலன்ஸ் வந்த நிலையில் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அந்த நபரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது சடலம் மீதான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.