32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெங்கு ஒழிப்பு தொடர்பான அவசரக் கூட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிமனையில் இடம் பெற்றது.

டெங்கு ஒழிப்பு தொடர்பான அவசரக் கூட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிமனையில் இடம் பெற்றது.சமகால நிலை காரணமாக காரைதீவுப் பிரதேசம் டெங்கு ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றது. இதுவரை 49 நோயாளிகள் இனம்காணாப்பட்டு இருக்கின்றார்கள். எனவே பொது மக்கள், நிறுவனங்கள் சகல தரப்புக்களும் இதனை ஒழிப்பதற்கு உதவவேண்டும் என காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.

அங்கு சுகாதாரவைத்திய அதிகாரி மேலும் தெரிவிக்கையில் மழைக்குப் பிந்திய ;கால கட்டத்தில் டெங்கு நோய் பெருகுகின்ற ஆபத்து கூடுதலாகக்காணப்படுகிறது. குறிப்பாக காரைதீவு 8,10,11,12ஆகிய பிரதேசங்களில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டு வருகின்றார்கள் எங்களைப் பொறுத்தவகையில் விசிற வேண்டிய இராசாயன பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவே பொது நிறுவனங்கள் பொது மக்கள் எங்களுடன் ஒத்துழைக்கவேண்டும் எனவும் வெற்றுக்காணிகளை வைத்திருப்போர் அதனைச் சுத்தமாக்கி வைத்துக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் பிரதேச செயலகம் பிரதேசசபை அதிபர்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள்,பாடசாலை அதிபர்கள் பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles