திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட, பயனாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தால் காசோலைகள் வழங்கப்பட்டன.

0
234

பொருளாதார நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகையினை வழங்கி வருகிறது.
திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேச சபைக்குட்பட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
இன்றைய தினம் உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித் தொகை வழங்கும் நிகழ்வு, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளைத்
தலைவர் ஏ.முரளீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெயவிக்ரமவும்,சிறப்பு விருந்தினர்களாக
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் தனேஸ்வரனும் கலந்துகொண்டனர்.