30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் பிரதேச அறநெறிப் பாடசாலை
ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடைகள் மற்றும் சைவசமய நாயன்மார்களின் திருவுருவப்படங்கள் என்பன் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஷாந்தி தேவராஜனின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் பிரதேசத்தில் ஆலயங்கள் மற்றும் இந்துசமய நிறுவனங்களின் ஊடாக நடாத்தப்பட்டு வரும் 23 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த 86 ஆசிரியர்களுக்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக இன்று சீருடைகள் மற்றும் இந்துசமய நாயன்மார்களின் திருவுருவப்படங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ஆகியோர் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிகள் மற்றும் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ நீ.அங்குசநாதக் குருக்கள் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா ஏ.சசிந்திரன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான கே.ஜெயராஜ் ந.பிரதாப் ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்மிளா பிரசாந்த் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles