27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நம்பிக்கையில்லா பிரேரணை – ஒரு விஷப் பரீட்சை?

நாளை – 17ஆம் திகதி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் நிற்கின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்னும் கோரிக்கை யுடன் ‘காலிமுகத்திடல்’ போராட்டம் தொடரும் நிலையில், பாராளு மன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாக இருந்தால், அது ஜனாதிபதிக்கு மேலும் ஒரு தலையிடியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,
நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்றால் – என்ன நடக்கும்?
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நிலை யில்தான், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படு கின்றது. ஜனாதிபதி ஏற்கனவே புதிய நகர்வொன்றை மேற்கொண்டி ருக்கும் நிலையில், ஜனாதிபதிக்கு எதிரான வாக்கெடுப்பில், அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிப்பார்களா? அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? அதேவேளை கூட்ட
மைப்பினர் ஆதரிக்கும் விடயமொன்றை, விமல் வீரவன்ஸ அணி யினர் ஆதரிப்பார்களா? இப்படியான பல கேள்விகளுக்கு மத்தியில்தான், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நம்பிக்கை வெளியிடப் படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென்னும் நிலைப்பாட்டிலிருக்கும் எதிர்த்தரப்புக்கள் அனைவரும் ஆதரிக்கலாம். ஏனெனில், அவர்கள் இதனை பொதுவெளிகளில் முன்வைத்து வந்தி ருக்கின்றனர். ஆனால், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சுயாதீன மாக செயல்பட்டுவரும் பாராளுமன்ற அணியினர் ஆதரித்தால் மட் டுமே, நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற முடியும். அவர்கள் இறுதி நேரத்தில் எவ்வாறான முடிவுகளை மேற்கொள்வார்கள்
என்பதை ஊகிக்க முடியாது. ஒருவேளை பின்வாங்கவும் கூடும்.
அடிப்படையில் – இது ஒரு விஷப் பரீட்சைதான். அதாவது, ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் அதிருப்திகள் இருக்கின்றன. அவர் வெளியேற வேண்டுமென்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுறுமாக இருந்தால், அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது இலகுவாகும்.
அவரது இடம் பலமடையும். இதுவரை அவர்மீது முன்வைக்கப்பட்டுவந்த விமர்சனங்களை, தொடர்ந்தும் முன்வைக்க முடியாத சூழல் உரு வாகும்.
இதேவேளை, கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டுமென்னும் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டமும் பலவீன மடையும். நம்பிக்கையில்லா பிரேரணையின் தோல்வி, போராட்டத் துக்கான தர்க்கரீதியான நியாயத்தை கேள்விக்குள்ளாக்கும். அதாவது, பாராளுமன்றம் ஜனாதிபதியின்மீது, நம்பிக்கை வைத்திருக்கின்ற போது, அவரை எவ்வாறு வெளியேறுமாறு, வெளியிலுள்ள ஒரு
குழுவினர் கோர முடியுமென்னும் பலமான வாதத்தை, ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினர் முன்வைக்கலாம்.
எனவே, நம்பிக்கையில்லா பிரேரணையென்பது, கவர்ச்சியான ஒன்றாக தெரிந்தாலும்கூட, அது ஆபத்தானதாகும். அதாவது, கத்தியில் நடப்பது போன்றது. இன்றைய சூழலில் கத்தியின் மேல் நடப்பது போன்ற அரசியல் விஷப் பரீட்சைகள், அடிப்படையில் வீழ்ந்துகிடக்கும் ராஜபக்ஷக்களுக்கு உத்வேகமூட்டுவதாகவும் அமைந்துவிடலாம். அரசியல் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ
குடும்பம், தப்பித்துக் கொள்வதற்கான மரக்கட்டைகளை தேடிக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியுற் றால், அப்படியானதொரு மரக்கட்டை அவர்களுக்குக் கிடைக்கவும் கூடும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles