33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்க தீர்மானம்!

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில்,   மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்தார். 

2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான செயற்பாடுகளை கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். 

இந்த நிலையில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், மே – ஜூன் மாதமளவில் முழுமையான கள நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இதள் பின்னர் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles