32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயணக்கட்டுப்பாட்டால் கால்நடை பண்ணையாளர்கள் பாதிப்பு!

நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாட்டால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் தொடரும் பயணக்கட்டுப்பாட்டல் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு- அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டிவரும் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இங்குள்ள கால்நடைகளுக்குரிய புண்ணாக்கு, வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை பெறமுடியாதுள்ளதுடன் அவற்றுக்கு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

முன்னர் 1200 ரூபா விற்கு விற்பனை செய்யப்பட்ட புண்ணாக்கு இன்று 1600 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், மிகக்குறைந்த விலையிலே தமது பால் உற்பத்தியை விற்பனை செய்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பில் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் பண்ணையாளர்களது வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் உதவ முன்வரவேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles