27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிஃபா உலகக் கிண்ண போட்டிகள் 104 ஆக உயர்வு

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64இல் இருந்து 104ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளின் எண்ணிக்கை 32 இல் இருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களில் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் புதிதாக 32 அணிகள் கொண்ட சுற்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுடன் மூன்றாம் இடம் பிடிக்கும் சிறந்த எட்டு அணிகளும் தகுதி பெறும்.

இதன்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் மற்றும் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத்தில் மொத்தமாக எட்டுப் போட்டிகளில் ஆடவுள்ளன. நடைமுறையில் உள்ள அட்டவணையில் அது ஏழு போட்டிகளாகவே உள்ளன.

ருவண்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பீஃபா குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

அடுத்த உலகக் கிண்ணம் அமெரிக்காவில் 11, மெக்சிகோவில் மூன்று மற்றும் கனடாவில் இரண்டு என மொத்தம் 16 நகரங்களில் நடைபெறவுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles