31 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘பெகாசஸ்’ ஊடுருவலையடுத்து பிரான்ஸ் அதிபரின் பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசிகளும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில் சிக்கியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள் மாற்றப்படவுள்ளன என்ற தகவலை எலிஸே மாளிகை வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.
ஊடுருவல் இலக்கில் உள்ளோர் பட்டியலில் அரசுத் தலைவரும் ஏனைய அரசுப்பிரமுகர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இதனால் சைபர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை புலனாய்வு சேவை கள் தொடக்கி உள்ளன.2017 முதல் மக்ரோன் பயன்படுத்திவரும் தொலை
பேசியை மொரோக்கோ நாட்டின் ரகசிய புலனாய்வு சேவை ஒன்று அடையாளம் கண்டுள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ‘லூ மொண்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் மற்றும் சமூகவலைத்தள
ங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் உள்ளவர் மக்ரோன்.பெகாசஸ் ஊடுருவல் மூலம் அவரது தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது என்று சைபர் தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பெகாசஸ் என்கின்ற மென்பொருள் மூலம் பல நாடுகளிலும் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது
மக்கள் போன்றோரது ஸ்மார்ட் தொலை பேசிகளுக்குள் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அது பற்றிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles