25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகின்றார் – எதிர் கட்சித் தலைவர்

பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகின்றார் என்றும் நாட்டை மீட்பதற்காக முன்வந்த இளைஞர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதி கூட்டத்தில் இன்று(12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ‘பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்துக்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர.

இது ஒரு விசித்திரமான நிலை. நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களின்; முன்நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதுகின்றார்.

நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைய செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர், முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை அநியாயமான செயலாகும்.

பொருளாதார குற்றத்தை செய்த கும்பலே சரி என்றால் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் பொருளாதாரக் கொலையை தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருக்கின்றது.

நாட்டுமக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருகின்றனர். அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles