27 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொலிஸ்துறை என்பது யாரினுடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல – சட்டத்தரணி அமிலே கொட

பொலிஸ்துறை என்பது யாரினுடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல அன்றும் சிலரது கட்டளைகளுக்கு அமைவாக சட்டத்துக்கு முரணாக எந்த பொலிஸ்மா அதிபர் செயற்பட்டாலும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருவராலும் தப்பிவிட முடியாது என்றும் சட்டத்தரணி அமிலே கொட மாவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் மேல் மாகாண சிரேஷ;;ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வசந்த முதலிகேவின் உரிமைக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை ஏழாவது பிரதிவாதியாக பெயரிடுவதற்கு நீதிமன்ற அனுமதியை கோரினார்.

போதிய ஆதாரங்கள்; இன்றி பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வசந்த முதலிகேவை தடுத்து வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன், உரிய விதிமுறைகளை மீறி பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடத்தில் ஓர் விடயத்தை கேட்க விளைகின்றோம். பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் ஒருவர் பொலிஸ்மா அதிபரை போன்று எவ்வாறு செயற்பட முடியும் என்றே நாம் கேட்கின்றோம்.

போராட்ட பூமியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அன்று பிரதி பொலிஸ்மா அதிபர் எவ்வாறு செயற்பட்டார் யாரினுடைய பக்கம் நின்று செயற்பட்டார் என்பதை யாவரும் அறிவர்.

போராட்டக்களத்தில் நிராயுதபாணியாக நின்ற தரப்பினரை விரட்டி விரட்டி தாக்குதல் மேற்கொண்டபோது, பொல்லினால் தாக்குதல் மேற்கொண்டபோது பிரதி பொலிஸ்மா அதிபர் எவ்வாறு செயற்பட்டார் என்பதையும் நாம் நான்கு அறிவோம்.

எப்போதும் அவர் யாரை பாதுகாத்தார் என்பதையும் நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

பொலிஸ் துறைக்கென நோக்கம் உள்ளது.

பொலிஸ் பிரிவினர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் எவ்வாறு பொலிஸ் மா அதிபரை போன்று செயற்பட முடியும்?

நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதாவது, எந்த பொலிஸ் மா அதிபராக இருந்தாலும் யாரினுடைய கட்டளைக்கும் அடிபணிந்து சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் அவர்களால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles