33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பௌத்த பீடங்களின் கையறுநிலை?

இலங்கையின் செல்வாக்கு மிக்க பௌத்த பீடங்களில் முதன்மை யானதாகக் கருதப்படும், கண்டி, அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி, வரகொட ஞானரத்தின தேரர், இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கின்றார். தங்களின் எச்சரிக்கைகளை ஆட்சி யாளர்கள் பொருட்படுத்தவில்லை – இதன் காரணமாகவே இவ்வாறான தொரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித் திருக்கின்றார். இப்போது கேள்வி – எந்தக் கடவுள் என்பதுதான்? மேற்
குலகத்தின் கிறிஸ்தவ கடவுளா அல்லது இந்தியாவின் இந்து கடவுளா?
விடுதலைப் புலிகளை வீழ்த்தியமை தொடர்பில் பாற்சோறு பரிமாறி யவர்களே, இப்போது, சிங்களவர்களை கடவுகள்தான் காப்பாற்ற வேண்டு மென்று கூறும் நிலைமைக்கு கீழறங்கியிருக்கின்றனர். யுத்த வெற்றி வாதத்தின் மோசமான தோல்விதான் இவ்வாறானதொரு நிலைமைக்கு காரணமென்னும் உண்மையை இப்போதாவது பௌத்த மதபீடங்களால் உணர முடிகின்றதா என்பதை அறிய முடியவில்லை. யுத்த வெற்றி வாதத்தை காண்பித்துத்தான், ராஜபக்ஷக்கள், சிங்கள பௌத்த பீடங் களையும் பெரும்பான்மையான சிங்கள மக்களையும் தங்கள் வசப்
படுத்தினர். அதிகாரங்களை தங்கள் குடும்பத்தை நோக்கி குவித்திருந்தனர்.
ராஜபக்ஷக்களின் இயலாமையை கண்டதன் பின்னர்தான், பௌத்த பீடம்,
கடவுள் வாதத்தில் தஞ்சமடைகின்றது.
சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலும் பௌத்த மதபீடங்களின் செல்வாக்கும் பிரிக்க முடியாதவை. 1957இல் எழுதப்பட்ட விகாரைக்குள் புரட்சி என்னும் நூலுடன் ஆரம்பிக்கின்றது பௌத்த பீடங்களின் அரசியல் செல்வாக்கு. இலங்கைத் தீவானது, சிங்களவர்களுக்கான தீவாக மட்டுமே பேணிப் பாதுகாப்பதுதான் விகாரைப் புரட்சியின் இலக்கு. இந்த இலக்கையே, இலங்கையை மாறி, மாறி ஆட்சி செய்யும் சிங்கள கட்சிகள் முன்னெடுத்து வந்திருக்கின்றன. இதுதான் இதுவரையான இலங்கைத் தீவின் வரலாறு.
இந்த காவியரசியல் மேலாதிக்கம் இலங்கைத் தீவை முன்நோக்கி நகர்த்துவதில் எந்தவொரு பங்களிப்பையும் இதுவரையில் வழங்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். எனினும், இந்த காவிகளின் ஆதிக்கத்தை முறியடித்துக் கொண்டு, பயணிக்கும் துணிவுள்ள எந்த வொரு சிங்கள தலைவரையும் இதுவரை இலங்கைத் தீவு காணவில்லை.
அமெரிக்காவின் மிலேனியம் ஒத்துழைப்பு திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்தபோது, அஸ்கிரிய பீடம் என்ன ஆலோசனையை வழங்கியிருந்தது? மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டுமென்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன – ஆனால், ராஜபக்ஷக்களோ அவற்றை புறம்தள்ளி செயல்பட்டனர். இதன் போது, ராஜபக்ஷகளுக்கு அஸ்கிரிய பீடம் என்ன ஆலோசனைகளை வழங்கியிருந்தது? ஆட்சியாளர்கள் இந்திய, மேற்குல எதிர்ப்பை மௌனமாக அங்கீகரிக்கும் செயல்
பாடுகளையே பௌத்த மதபீடங்கள் முன்னெடுத்து வந்திருக்கின்றன.
சிங்கள – பௌத்த தேசியவாதிகளின் மேலாதிக்க நடவடிக்கைகளை பௌத்த மதபீடங்கள் ஒரு போதுமே விமர்சித்ததில்லை. தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் – பௌத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி, புத்தரின் போதனைகளுக்கு மாறாக சிங்கள மேலாதிக்கவாதிகள் செயல்படுகின்ற போதெல்லாம், அஸ்கிரிய பீடம், என்ன செய்து கொண்டிருந்தது?
ஆழமாக நோக்கினால், இலங்கைத் தீவு இவ்வாறானதொரு நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதற்கு முதல் காரணம் – பௌத்த மதபீடங்களேயாகும். இனவாத அரசியல்வாதிகள், தொடர்ந்தும் இனவாதத்தில் திருப்தி கொண்டமைக்கு பின்னால் பௌத்த மத பீடங்களின் ஆசீர்வாதமே இருந்திருக்கின்றது. இந்த அடிப்படையில்
சிந்தித்தால், இலங்கைத் தீவின் இன்றைய நிலைக்கு ஆட்சியாளர்கள் எந்தளவு பொறுப்போ, அந்தளவுக்கு பௌத்த மதபீடங்களும் பொறுப்பாகும்.
மனிதன் செய்த தவறுகளுக்கு மனிதன்தான் பரிகாரம் தேட வேண்டும்.
கடவுளல்ல. சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதிகள் புரிந்த தவறுகளை உணர்ந்து, அவற்றை சரிசெய்வது தொடர்பில் சிந்தித்தால் மட்டுமே நாட்டுக்கு விமோசனமுண்டு.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles