30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டு- யானை கூட்டு வேடிக்கையான விடயம்!கஜேந்திரகுமார்,

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுதெரிவித்தார்

வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும் வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்ற கட்டத்திலே அவர்கள் நினைக்கின்றார்கள் பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அது மட்டும் தான் வித்தியாசம்
தெற்கிலேமொட்டு மட்டும் யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டுதேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது

யானை தேர்தல் காலத்திலே முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையிலே அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கு எடுக்கலாமென்று நினைக்கிறார்கள் யதார்த்தத்திற்கு முரணாண வகையிலே சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள்

மக்களின் உண்மையான யதார்த்தம் மாறப்போவதில்லை மாறாக மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்றால் நாங்கள் செய்தி ஒன்றை அவர்களுக்கு கொடுக்கப் போகின்றோம் ஆனால் அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என சிந்திப்பார்கள்

தெற்கிலே ராஜபக்சவுகளுக்குமக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலே ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்சவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது

ஒட்டுமொத்தமாக உலகமே நிராகரிக்கின்ற கடந்த தேர்தலிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்தற்காக மொட்டுடன் யானை கூட்டு சேருவது என்பது வேடிக்கையான விடயமாகும் என்றார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles