32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் பற்களுக்கான
இலவச மருத்துவ முகாம்

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் கிழக்கு மாகாண பிராந்திய கிளை சங்கத்தின் 7 வது வருட மகாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பற்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பு சின்ன ஊறணி பாரதி சனசமூக நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டன

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் கிழக்கு மாகாண பிராந்திய கிளை சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்துபல் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பு சின்ன ஊறணி பாரதி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இலங்கை பல் சிகிச்சை சங்கத்தின் கிழக்கு மாகாண பிராந்திய சங்கத்தின் சிரேஷ்ட வைத்திய குழாமினால்
பற்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் கிழக்கு மாகாண பிராந்திய கிளை சங்கத்தின்தலைவர் வைத்தியர் டி கேதீசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பற்களுக்கான இலவச மருத்துவ முகாம் தொடர்பாக வைத்தியர் ஜி .சுகுணன், மற்றும் மாநகர முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles