31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் 4ஆவது நாளாக இன்றும் உணவு தவிர்ப்புப் போராட்டம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தொடர்ந்து 4ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் சர்வமதத் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆலய முன்றிலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு பலக்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இன்று தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் இதன் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் 4ஆவது நாளான இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வருகை தந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles