மட்டக்களப்பு காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

0
161

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பதுறியா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.
கல்வித் திணைக்களத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக பாடசாலை அதிபர் வை.எம்.றிப்கானின் வழிகாட்டலில் திருமதி எஸ்.ஆர்.எம்.பறக்கத்துல்லாஹ் தலைமையில்
தேர்தல் இடம் பெற்றது.
இதில் 30 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக 43 மாணவர்கள் வேட்டபாளர்களாக போட்டியிட்டனர்.
465 மாணவர்கள் வாக்களித்ததுடன் இதில் 10 மாணவ அமைச்சர்களும், 10 மாணவ இராஜாங்;க அமைச்சர்களும்
தெரிவு செய்யப்படவுள்;ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தல் பாராளுமன்ற பிரதி நிதிகளை எவ்வாறு தெரிவு செய்வது போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவு படுத்தும் வகையில்
மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டது.