மட்டக்களப்பு புனித ஜோசெப் விசேட கல்வி நிலைய மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு கல்விநிலைய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
புனித ஜோசெப் விசேட கல்வி நிலைய அதிபர்
எம்.எ.பரிஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு லயன்ஸ் கழக அனுசரணையில் இன்று கொண்டாடப்பட்டது.
மட்டக்களப்பு புனித ஜோசெப் விசேட கல்வி நிலைய மாணவர்களினால் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் அருட்சகோதரர்கள்,மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,கல்வி நிலைய மாணவர்கள்,பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.