27 C
Colombo
Wednesday, December 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

“மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்”

“மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதையும் பொறுப்புள்ள தரப்பினரை பொறுப்புக் கூறவைப்பதன் மூலம் எதிர்கால மீறல்களைத் தடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது”- இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் உயிர் வாழும் காலம் வரைக்கும் அவனுக்கான உரிமை கூடவே இருக்கிறது. மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை என்பதால் இலங்கை அரசியலமைப்பு மூலம் அடிப்படை உரிமையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமை தினத்தை சிறப்பிக்கும் முகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கை மூலம் ஏற்படும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் நடப்பு ஆண்டில் ஆணைக்குழுவால் செய்யப்பட்ட குறிப்பிடப்பட்ட சில பரிந்துரைகள் பற்றியும் ஆணைக்குழுவால் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 22/88 இன் அடிப்படையில் அங்கவீனமுற்றோர்களுக்கு தொழில் வழங்குதல் பற்றிய வழிகாட்டல்கள் பற்றியும் கருத்துத் தெரிவித்ததுடன்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்ததற்கமைய பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்கும் நோக்காகக் கொண்டுள்ளது என்பதையும்

பொறுப்புள்ள தரப்பினரை பொறுப்புக் கூற வைப்பதன் மூலம் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை வளர்ப்பதன் மூலமும் எதிர்காலத்தில் உரிமை மீறல்களை தடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாசில் கலந்து கொண்டார்.

அத்துடன் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள், அறிக்கைகள் விருந்தினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles