25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாணவர்களுக்கான வழிகாட்டல்
கருத்தரங்கு நடைபெற்றது

அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசியபாடசாலையில் இருந்து இவ்வருடம் க.பொ.தராதரஉயர்தரம் கற்பதற்கானதகுதியினைபெற்றிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலைநிருவாகத்தின் ஒத்துழைப்போடுபாடசாலையின் பழையமாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் பிரதிஅதிபர் ஜெயந்தன் மற்றும் மதியழகன் ஆகியோரது பங்கு பற்றுதலோடு நடைபெற்ற இக்கருத்தரங்கில் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளரும் பிரதேச செயலாளருமானவி.பபாகரன் சங்கத்தின் உபதலைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளர் என்.லோகிஸ் சங்கத்தின் பொருளாளரும் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருமான குணாளினி சட்டத்தரணி அனுஜா தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் கோபி உள்ளிட்டவர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் சங்கத்தின் உறுப்பினர்களான மேலதிக மாவட்ட பதிவாளர் பிரதீப் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான வி.சுகிர்தகுமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் புவனேந்திரன் மற்றும் பாடாசலையின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது விளக்கமளித்த வளவாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் உயர்தரத்தில் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டிய பாடங்கள் தொடர்பிலும் அதன் மூலம் அடைந்து கொள்ளக்கூடிய இலக்குகள் மற்றும் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் தெளிவூட்டினர்.

ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் இயல்பு நிலைக்கேற்ப பாடநெறிகளை தெரிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியதுடன் இதற்கான ஒத்துழைப்பை பெற்றோர்கள் வழங்கவேண்டும் எனவும் அறிவறுத்தல் வழங்கினர்.

மேலும் எதிர்காலசவால்மிக்கஉலகிற்குஈடு கொடுக்கும் வகையில் மாணவர்களின் ஆற்றல்களைவளர்க்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

இதேநேரம் பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களும் தங்களதுகருத்துக்களைமுன்வைத்ததுடன் மாணவர்களின் எதிர்காலம் சிறக்கதங்களால் முடிந்தஅத்தனைவேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாககுறிப்பிட்டனர்.

நிறைவாகவழிகாட்டல் கருத்தரங்கினைஏற்பாடுசெய்தபழையமாணவர்கள் சங்கத்திற்குபிரதிஅதிபரினால் நன்றிதெரிவிக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles