33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாவட்டசபை உருவாக்கத்திற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்ககூடாது!ஐனநாயக போராளிகள்,

மாவட்ட சபை உருவாக்கத்திற்கு தமிழ் அரசியல்  தலைமைகள் ஒத்துழைக்ககூடாது என 

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்தார்,,

 எதிர்காலத்தில் தமிழ் தேசிய அரசியல் என்பது ஒரு பலம்  மிக்க சக்தியாக இந்த மண்ணிலே மீண்டு வரவேண்டும் என்று தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோளை விடுகின்றோம்

 மக்கள் கொள்கையிலே  சளைக்காதவர்கள் அவர்கள் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் தேசிய மாவீரர் எழுச்சி நாளில் உணர்வு கொண்டு மக்கள் எழுச்சியாக ஒன்று கூடி தமது தேசிய உணர்வினை  காட்டியுள்ளார்கள்

 எதிர்காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் அதன் பால் செயல்பட வேண்டும் என   கோரிக்கை விடுகின்றோம்

 இதே போல் தென் இலங்கையிலே அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் தமிழர் தாயகத்தில் தென் இலங்கையை ஆட்சியாளர்களுடைய ஆக்கிரமிப்புகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை முன் வைக்க உள்ளோம். 

அண்மையிலே வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் ஜனாதிபதி வவுனியாவில்  இடம் பெற்ற சந்திப்புகளின் போது அவருடைய கருத்துக்களும் அவரின்  தமிழ் மக்கள் சார்பாக நிலைப்பாடுகளை நாங்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம்

  எதிர்காலத்தில் எமது தமிழ் தலைமைகள்  தாயக பகுதியில் தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உணர முடிகின்றது மாகாண சபை முறைமை என்பதற்கு எதிராக மாவட்ட சபைகளை இங்கே அமைத்து மாவட்ட சபைகளுக்கு ஊடாக எமது இனத்தை பிரித்தாளும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதையும் எங்களால் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது

 மாவட்ட சபைகள் என்பது உண்மையாக  கிழக்கு மாகாணம் எவ்வாறு போராட்டக் காலத்திலே அதாவது சமாதான காலப் பகுதியிலே தமிழ் தேசியம்  எவ்வாறு சிதைக்கப்பட்டதோ அதேபோலத்தான் வடக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியாக மக்களை பிடித்து தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை சிதைத்து அடியோடு அழிக்கின்ற ஒரு திட்டத்தை அவர் இங்கே நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார்

 உண்மையாக இந்த விடயங்களை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நன்கு புரிந்து அதற்கு எதிராக செயல்பட வேண்டும் அந்த நடவடிக்கைகளை  முழுதாக முறியடிக்க வேண்டும் இல்லையெனில் எதிர்காலத்தில் எமது இருப்பு கேள்விக்குறியான பல விடயங்கள் இங்கே கொண்டுவரப்படும் நாம் ஒரு பொறிக்கிள் சிக்கப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கின்றோம் 

தமிழ் தேசியத்தின் பால் ஒரு ஒற்றுமை இல்லாத நிலைமை உருவாக்கப்படும் பிரிவினைகள் உருவாக்கப்படும் அந்த நிலையிலே எமது தமிழ் தேசியம் முற்றும் முழுதாக எதிர்காலத்தில் சிதைத்து அழிக்கப்பட கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது 

இதை எமது மக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எமது அரசியல் தலைவர்களும் இந்த விடயங்களை கூடுதலான அக்கறை செலுத்தி நமது மக்களுடைய உரிமையை வென்றெடுக்க ஒற்றுமையாக நின்று செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

 மாகாண சபை ஆட்சி முறை என்பது அழிக்கப்படுமாக இருந்தால் தமிழர் தாயகப்பகுதி தமிழருடைய இருப்பு கேள்விக்குறியாகும் என்பதனை மிகத் தெளிவாக கூறி வைக்கின்றோம் இதை அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்து செயல்பட வேண்டும்என்ற

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles