28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீண்டும் புத்துயிர் பெற்றது 48,500 ஆண்டுகள் பழமையான சோம்பி வைரஸ்!

ரஷ்யாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான சோம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘சோம்பி வைரஸ்’ மூலம் மேலும் ஒரு தொற்றுநோய் குறித்த அச்சத்தை ஆய்வாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ‘பழங்கால அறியப்படாத வைரஸின் புத்துயிரால் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விடயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும்’ என்று ‘வைரஸ்’ ஆய்வு கூறுகிறது. ஆய்வு அறிக்கையின்படி, புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றும் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48 ஆயிரத்து 500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த ‘சோம்பி வைரஸ்கள்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் ஐந்து வௌ;வேறு இனங்களைச் சேர்ந்தவை எனவும் அவைகளின் பெயர் மெகா வைரஸ் மம்மத் எனவும், இந்த வைரஸ்கள் யானைகளின் மூதாதையர்களான மாமூத்கள் சைபீரியாவில் சுற்றித் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பனி காலத்தில் பல வைரஸ்கள் சைபீரியாவின் பெர்மாஃப்ரோஸ்ட் பனியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் ‘ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உறைந்திருக்கும் கரிமப் பொருட்களை வெளியிடுவதன் அமைதியற்ற விளைவைக் கொண்டுள்ளது – ஒருவேளை இதில் கொடிய கிருமிகளும் இருக்கலாம் எனவும், ‘இந்த கரிமப் பொருளின் ஒரு பகுதியாக புத்துயிர் பெற்ற செல்லுலார் நுண்ணுயிரிகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து செயலற்ற நிலையில் இருக்கும் வைரஸ்கள் உள்ளன’ என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் வெளியே எடுத்து உயிர்ப்பித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதனால்தான் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இதன் மூலம் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒளி, வெப்பம், ஒக்ஸிஜன் மற்றும் பிற வெளிப்புற சுற்றுச்சூழல் மாறிகள் வெளிப்படும் போது இந்த அறியப்படாத வைரஸ்களின் தொற்று அளவை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles