27 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

இந்நாட்டினுள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நாட்டு கொரிய தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கை பாதுகாப்பான நாடு என்று தெரிவித்த அவர் கொரிய தூதுவருக்கு இந்நாட்டினுள் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிகை விடுத்தார்.

கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் கொரிய முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டதாக தெரிவித்த பிரதமர் தற்போதைய நிலையில் 115 கொரிய நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

இதன்போது, கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கொரிய தூதுவர், நம்பகமான பிணைப்பு காரணமாகே இந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக கொரிய தூதுவர் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், கொவிட் 19 தொற்று நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க கொரிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles