27 C
Colombo
Wednesday, April 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முள்ளிவாய்க்கால் – 13

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும்
உனது வாழ்நாட்களாகும். இது அரசியலுக்கும் பொருந்தும். அரசியலிலும்
கடந்து சென்ற காலமென்று ஒன்றுண்டு. நமது கடந்த காலத்தை நினைக்
கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள
வேண்டும்.
நாம் இப்போது எந்த இடத்தில் இருக்கின்றோம்? – முன்னேற்றகரமான
நிலையில் இருக்கின்றோமா? – அல்லது தொடர்ந்தும் பின்னடைவு
களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கின்றோமா? இந்தக் கேள்விகள்
நம் அனைவருக்குமானது. இந்தக் கேள்விக்கான பதிலை அனைவரும்
நேர்மையுடன் தேடவேண்டும். இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதில்
குற்றச்சாட்டுக்கள் பயனளிக்காது. மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை
முன்வைப்பது, ஒரு வகையில் ஒவ்வொருவரும், தங்களின் பொறுப்புக்களி
லிருந்து தப்பியோடுவதற்கு சமமானதாகும்.
முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்து 13 ஆண்டுகள் சென்றுவிட்டன.
இந்தக் காலத்தில் தமிழர் அரசியலில் முன்னேற்றகரமான அடைவுகள்
எதனையும் எவராலும் நிரூபிக்க முடியவில்லை. அரசியலில் அடைவுகள்
தொடர்பில் பேசுகின்றபோது, காலம், காலத்தை கையாள முற்படும் அரசியல்
சக்திகள் ஆகிய இரண்டும் முக்கியமானவை. இரண்டும் ஒரு புள்ளியில்
சந்திக்கும்போதுதான், அரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் நன்மையடை
கின்றனர். ஒரு போராட்டம் வெற்றிபெறுகின்றபோது, இவ்வாறான உரையா
டல்கள் தேவைப்படாது. ஆனால், தோல்வி ஏற்பட்டுவிட்டால் – தோல்விக்கு
பின்னரான காலத்தை கையாள முற்படும்போதுதான், இந்தக் கேள்வி அவ
சியப்படுகின்றது.
கடந்த 13 வருடங்களில் ஏராளமான விடயங்கள் தொடர்பில் தமிழ்
அரசியல் சமூகம் விவாதித்திருக்கின்றது. இதில், மற்றவர்கள் மீதான குற்
றச்சாட்டுக்களே அதிகம். ஆனால், அடைந்தது என்ன? – என்று கேள்வி
யெழுப்பினால், அனைவரின் நகர்வுகளும் தோல்வியில்தான் முடிந்திருக்
கின்றது. லெனினின் ஒரு கூற்றுண்டு. அதாவது, “வரலாற்றில் தோல்வி
யடைந்த ஒவ்வொரு மக்கள் கூட்டமும், தங்களின் ஆற்றல் எங்கு திரண்
டிருக்கின்றது என்பதை கண்டுகொள்ளாமையாலேயே தோற்றுப் போனார்
கள்.”
தமிழர்களின் பலம் எது – பலவீனம் எது என்பதில் ஆழமான புரிதல்கள்
இல்லை. அபரிமிதமான கற்பனைகளிலேயே பலரின் காலம் கழிந்திருக்
கின்றது. விரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள். ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம்,
தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கின்றதோ – அதற்கேற்பவே, நன்
மைகளை அடைகின்றது.
தமிழர்களின் இன்றைய அரசியல் என்பது, அடிப்படையிலேயே, ஒரு
போரியல் தோல்விக்கு பின்னரான அரசியலாகும். அந்தப் போரில் ஏன்
தோல்வியேற்பட்டது என்பது தொடர்பில் தெளிவான பார்வை இருக்க
வேண்டும். இதனை மறந்து அரசியல் தொடர்பில் விவாதிக்க முற்படுவது
தவறானது. ஒரு போரியல் தோல்வியேற்படும்போது, போர்க் காலத்தைய
நம்பிக்கைகள், நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே தோல்வி
யடைந்துவிடும்.
போரியல் தோல்விக்கு பின்னரான காலமென்பது, அடிப்படையில், யுத்த
விளைவுகளை முன்னிறுத்தி, அரசியலை முன்னெடுக்கும் அரசியல்
காலமாகும். இந்தப் பின்னணியில்தான், ஈழத் தமிழர்களாகிய நாங்கள்,
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களை
முன்வைத்து, அதற்கான நீதியை கோரும் அரசியலை முன்னெடுத்து
வருகின்றோம்.
முள்ளிவாய்க்கால் என்பது, பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றுக்கான
நீதியை கோரும் பயணத்திற்கான, ஒரு கூட்டு நினைவாகும். முள்ளிவாய்க்
கால் அடிப்படையில் ஒப்பாரி வைப்பதற்கான ஒரு குறியீடல்ல. எங்களை
சீர்தூக்கி பார்த்து, எங்களுக்குள் இருக்கும் தேவையற்றவற்றை களைந்து,
எங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான ஓர் உந்துசக்தியாகும். ஒவ்வொரு
வருடமும் முள்ளிவாய்க்காலை நினைத்துவிட்டு, பின்னர் ஆண்டு முழு
வதும், கட்சிகளின், சிவில் சமூக குழுக்களின் ஒற்றுமை பற்றி விவாதம்
செய்தால், முள்ளிவாய்க்கால் சாதாரணமாக நினைத்துச் செல்லும் ஒரு
சம்பிராதயபூர்வமான நிகழ்வாகிவிடும். கடந்த 13 வருடங்கள் இப்படித்தான்
கடந்திருக்கின்றன. கடந்த 13 வருடங்களில் தமிழ்த் தேசிய பரப்பில் –
களத்திலும் புலத்திலும் ஒற்றுமை வளர்ந்ததைவிடவும், சிதைந்ததே
அதிகம். அவ்வாறாயின் முள்ளிவாய்க்கால் நேர்மையுடன் நினைக்கப்பட்டிருப்
பதாக நாம் எவ்வாறு கூறமுடியும்?

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles