கடும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்தார்.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே/14 கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே/165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என தெரிவித்தார்.