30 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கும் நிவாரணப்பொதி – அமைச்சர் டக்ளஸ்

கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் யாழ்.மாவட்டத்தில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1,700 பேருக்கு அரசால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதியை உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சுயதனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்துக்கான இடர்கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரியப்படுத்தப்பட்டது.


இது தொடர்பில் பாராளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம உத்தியோகத்தர்கள் மூலம் தனிமைப்படுத்தலிலுள்ள அனைவருக்கும் முதற்கட்டமாக நிவாரணப் பொதிகளை வழங்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


எனவே, தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதாகச் சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இல்லை எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles