33 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நளினி உட்பட 6 பேரும் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம்
அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம்
தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு ஆகியோருக்கு மாத்திரம் தூக்கு தண்டனை உறுதியானது.
கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றினால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் இந்திய உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம்
என தமிழக அரசு முடிவெடுத்தது.
தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.
பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.
குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால், உயர்நீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்தது.
இதன்பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர்நீதி மன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.
இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட மிகுதி 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.
இம்மனு மீது உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும்
விடுதலை செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரும். விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்திய உயர்நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்ததைப்போன்றே,
அதே அதிகாரத்தை கொண்டு தற்போது நளினி உள்பட 6 பேரையும் இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles