27.8 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வரவு செலவுத்திட்டத்தில், புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை : நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து

2023 வரவு செலவுத் திட்டத்தில், புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை எனவும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வே, ஜனாதிபதியின் திட்டம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வரவு – செலவுத்திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது.
கூட்ட வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூட்டியுள்ள நிலையில், தற்போது இந்த வரவு – செலவுத் திட்டத்தில், மக்கியமானது என எதையும் குறிப்பிட முடியாது.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடியை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான, ஜனாதிபதியின் திட்டமாக மட்டுமே, இது அமைந்துள்ளது.
அதனால், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில், இந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, ஜனாதிபதி தமது திட்டத்தை முன்வைத்துள்ளார்.
என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles