32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலிவடக்கில் காணிகளை விடுவித்தால் மக்கள் சுய உழைப்பில் நிமிர்வர்!தவிசாளர்,

வலிவடக்கில் விடுவிக்கப்படாது உள்ள இடங்களை விடுவித்தால் மக்கள் சுயமாக முன்னேறி விடுவார்கள் என வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ சுகிர்தன்தெரிவித்தார் 

தையிட்டி  வள்ளுவர் புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும்  போது மேற்கண்டவாறு தெரிவித்தார் தையிட்டி கிழக்கு மக்கள் அண்மையில் மீள்குடியேறி தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் புரம் கிராமத்தில் திருவள்ளுவர் சிலையானது அந்த கிராம மக்களின் சொந்த உழைப்பினால் இன்றைய தினம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது

மீள் குடியேறி  நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குள் தாங்கள் சுயமாக உழைத்து முன்னேறி வருகின்ற நிலையில் தையிட்டி சனசமூக  நிலையத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்படுகின்றது

 குறிப்பாக எமது வலிவடக்கில் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் ராணுவத்தினிடமிருந்து விடுவித்தால் அந்த இடங்கள் விரைவில் அபிவிருத்தி அடையும் 

 இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் சுயமாக உழைத்து வாழ்ந்தவர்கள் எனவே ஏனைய இடங்களும் விடுவிக்கப்பட்டால்  தமது சொந்த உழைப்பின் மூலம் நிமிர்ந்து விடுவார்கள் 

எனவே ஏனைய  விடுவிக்கப்படாது உள்ள  நிலங்களையும் விடுவித்தால் எமது வலி வடக்கு மக்கள் தாமாகவே உழைத்து  உயர்ந்து விடுவார்கள் அத்தோடு இந்த பகுதி மக்கள் கடுமையான உழைப்பாளிகள் ஏனைய இடங்களும் விடுவிக்கப்படுமிடத்து சுய பொருளாதாரத்தினை மேற்கொண்டு முன்னோக்கி சென்று விடுவார்கள் என தெரிவித்தார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles