33 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுணதீவு நெடுஞ்சேனையில்
பொதுக் கிணறு கையளிப்பு

பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான ‘பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் வீட்டுத் தோட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பொதுக் கிணறு அமைத்துக் கொடுத்து இன்றைய தினம் அதனை அம்மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பசுமை இல்லம் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அருள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் வினோத், மட்டு அம்பாறை இணைப்பாளர் சாந்தன், மண்முனை மேற்குப் பிரதேசசபைச் செயலாளர் உட்பட அமைப்பின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பசுமை இல்லத்தின் மூலம் மேற்படி நெடுஞ்சேனை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்ட செயற்திட்டத்தின் போது மேற்படி பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முருகேசன் உதயணன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேற்படி கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்றைய தினம் அம்மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விவேகானந்தன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேலும் பல வீட்டுத் தோட்ட மரக்கன்றுகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்;பிடத்தக்கது.

Related Articles

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரிப்பு!

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுவிப்பு!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடயத்துடன் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா -...

பிரேஸிலில் கடும் வெப்பம்!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரிப்பு!

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுவிப்பு!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடயத்துடன் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா -...

பிரேஸிலில் கடும் வெப்பம்!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...

9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலர்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...