27 C
Colombo
Wednesday, December 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதாவுல்லா மனு

திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என்று கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மனு ஒன்றின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவில் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில்கள் கிடைக்கவில்லை. எனவே, எனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டுள்ளன.

நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று கொழும்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும்- என்றார்.

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை அதாவுல்லா கையளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles