முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய வாகனமொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா இன்றைய தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்த அவர் 2014ஆம் ஆண்டு எனது வாகன அனுமதி பத்திரத்தை வியாபாரிகளுக்குக் கொடுக்கவில்லை. விபத்திற்குள்ளான எனது வாகனத்தை சுஜீவ சேனசிங்கவிற்கு வழங்கியிருந்தேன்.
2014ஆம் ஆண்டு வழங்கிய வாகனம் தொடர்பில் இன்று (20) என்னிடம் வாக்கு மூலம் வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்காக இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாக ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.